சித்தராமையா தொடர்பான வழக்கில் யூ-டியூப், மெட்டா நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்

சித்தராமையா தொடர்பான வழக்கில் யூ-டியூப் மற்றும் பேஸ்புக் (முகநூல்) நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதி யுள்ளனர்.
சித்தராமையா தொடர்பான வழக்கில் யூ-டியூப், மெட்டா நிறுவனத்துக்கு போலீசார் கடிதம்
Published on: 

பெங்களூரு,

கர்நாடகத்தில் மந்திரிகளை ரகசிய வீடியோ எடுக்க முயற்சி நடந்ததாக குற்றச்சாட் டுகள் எழுந்தது. அதே நேரத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தொடர் பான வீடியோக்கள் வெளியானது. இந்த விவகாரங்கள் கர்நாடகத்தில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சித்தராமையா சார்பில் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சித்தராமையா தொடர்பான வழக்கில் யூ-டியூப் மற்றும் பேஸ்புக் (முகநூல்) நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதி யுள்ளனர்.

அந்த கடிதத்தில் கர்நாடக ஹனிடிராப் என்ற யூ-டியூப் சேனலில் முதலில் வீடி யோக்களை பதிவேற்றம் செய்தது யார்?, அந்த சேனல் உரிமையாளர் பற்றிய தக வல்களை வழங்கும்படி யூ-டியூப் நிறுவனத்துக்கும், பேஸ்புக்கில் முதலில் வீடி யோக்களை வெளியிட்டது யார்? என்பது பற்றிய தகவல்களை அளிக்கும்படியும் மெட்டா நிறுவனத்துக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பரப்பியவர்கள் பற்றிய கணக்கு தகவல்களை அளிக்கும்படியும் யூ-டியூப் மற்றும் மெட்டா நிறுவனத்துக்கு ' அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த நிறுவனங்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்ப டையில் வீடியோக்களை பதிவேற்றம் செய்த நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com