பெண் போலீசை மிரட்டி பாலியல் பலாத்காரம்: போலீஸ் சூப்பிரண்டு டிஸ்மிஸ்

காரைக்காலில் பெண் போலீஸ் ஒருவரை, போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பெண் போலீசை மிரட்டி பாலியல் பலாத்காரம்: போலீஸ் சூப்பிரண்டு டிஸ்மிஸ்.
Published on: 

புதுச்சேரி,

காரைக்காலில் பணியாற்றியபோது பெண் போலீசை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் சூப்பிரண்டை புதுச்சேரி அரசு டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது.

பெண் போலீசை மிரட்டி பாலியல் பலாத்காரம்

புதுச்சேரியில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சுப்பிரமணியன் (வயது 54) என்பவர், காரைக்காலில் பணியாற்றியபோது அங்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் திருமணமான பெண் போலீஸ் ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஆபாச வீடியோக்களைக் காட்டி நகை மற்றும் பணம் பறித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

போலீஸ் சூப்பிரண்டு டிஸ்மிஸ்

இந்த சம்பவத்தினால், பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி புதுவை தலைமைச்செயலாளர் சரத்சவுகான், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியனை பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்து உத்தரவிட்டுள்ளார்.

X