

குருதாஸ்பூர்,
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்ட எல்லைக்குள், 11 கையெறி குணடுகளுடன் பாகிஸ்தானிலிருந்து வந்த சிறிய ரக ட்ரோன் விமானத்தை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. டிரோனில் கொண்டு வரப்பட்ட 11 கையெறி குண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
இது குறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறும் போது, கடந்த 19 ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் தரப்பில் இருந்து டிரோனில் வந்து கையெறி குண்டுகளை வீச முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதனை அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து முறியடித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.