இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது அரசியல் கட்சிகள் முதிர்ச்சியை காட்டின: ஆர்.எஸ்.எஸ். தலைவர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது அரசியல் கட்சிகள் முதிர்ச்சியை காட்டின: ஆர்.எஸ்.எஸ். தலைவர்
Published on

ஸ்ரீநகர்,

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் இந்திய சமூகத்தை ஒன்றிணைத்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தேசத்தை ஆதரித்தது, அரசியல் கட்சிகளின் முதிர்ச்சியையும் பரஸ்பர புரிதலையும் காட்டியது. பாகிஸ்தான் நம்மை நேரடியாக வெல்ல முடியாததால், அது பயங்கரவாதத்தின் உதவியைப் பெற்று, பினாமிப் போர்களைத் தொடங்கியது. நாம் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே பிரிந்தோம், ஆனால் பிரிந்த உடனேயே அவர்கள் முரண்பாட்டை உருவாக்கத் தொடங்கினர்" என்று கூறியுள்ள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான், எல்லையோர மாநிலங்களில் குடியிருப்புகளை குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதல் முயற்சியை இந்தியா முறியடித்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய அரசு எடுக்கும் முழு நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருவோம் என்று எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் பேசின. இதை சுட்டிக்காட்டும் விதமாக மோகன் பகவத் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com