இணையதளத்தில் தவறான தகவலை பதிவிட்ட சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகள் 2 பேர் கைது, பணிநீக்கம்

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் தலைவர் அனில் அம்பானிக்கு எதிராக எரிக்சன் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு, கடந்த ஜனவரி 7–ந் தேதி விசாரணைக்கு வந்தது.
இணையதளத்தில் தவறான தகவலை பதிவிட்ட சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகள் 2 பேர் கைது, பணிநீக்கம்
Published on

புதுடெல்லி,

அனில் அம்பானி, கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு அப்போது உத்தரவிட்டது.

ஆனால், நீதிபதி உத்தரவை குறிப்பெடுத்து சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் பதிவு செய்யும் அதிகாரிகள் 2 பேர், அனில் அம்பானி ஆஜராக தேவையில்லை என்று நீதிபதி உத்தரவிட்டதாக தவறான தகவலை இணையதளத்தில் பதிவிட்டனர். இத்தகவலை எரிக்சன் நிறுவன வக்கீல், நீதிபதி நாரிமன் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதுபற்றி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் நீதிபதி நாரிமன் புகார் செய்தார்.

அதையடுத்து, தலைமை நீதிபதி உத்தரவுப்படி, மணவ், தபன் என்ற 2 அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com