பிரீமியம் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு: வாகன ஒட்டிகளுக்கு அதிர்ச்சி

உயர் ரக சொகுசுகார்கள், பைக்குகள் ஆகியவற்றிற்கு பிரீமியம் பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது.
பிரீமியம் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு: வாகன ஒட்டிகளுக்கு அதிர்ச்சி
Published on

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியதை அடுத்து, இரு தரப்புக்கும் இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. ஈரானின் முக்கிய எண்ணெய் வயலை இஸ்ரேல் தாக்கியதால், கத்தாரின் மிகப் பெரிய எண்ணெய் வயலை ஈரான் தாக்கியது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. தற்போதும் ஏற்ற இறக்கங்களுடன் கச்சா எண்ணெய் விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில், இதனை சமாளிக்கும் விதமாக இந்தியன் ஆயில் நிறுவனம் பிரீமியம் எக்ஸ்பி 100 பெட்ரோல் மற்றும் எக்ஸ்ட்ரா க்ரீன் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. மேலும், விமான எரிபொருள் விலை கிலோலிட்டருக்கு ரூ.2 லட்சத்தைதிற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இது நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்துகிறது.

எக்ஸ்பி 100 பெட்ரோல் லிட்டருக்கு ரூ.149-ல் இருந்து ரூ. 160 ஆகவும், எக்ஸ்ட்ரா க்ரீன் பிரீமியம் டீசல் ரூ.91.49-ல் இருந்து ரூ.92.99 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எக்ஸ்பி 100 பிரீமியம் பெட்ரோல் நாட்டின் முதல் 100- ஆக்டேன் பிரீமியம் பெட்ரோல் ஆகும். இது உயர் ரக சொகுசுகார்கள், பைக்குகள், ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. பிரீமியம் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருப்பது வாகன ஒட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com