ரஷிய அதிபர் புதின் டிசம்பர் மாதம் இந்தியா வருகை

இந்தியா - ரஷியா உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
ரஷிய அதிபர் புதின் டிசம்பர் மாதம் இந்தியா வருகை
Published on

டெல்லி,

இந்தியா - ரஷியா உச்சிமாநாடு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு ரஷிய அதிபர் புதினுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வர உள்ளார். இந்திய பயணத்தின்போது ரஷிய அதிபர் புதின் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, பிரதமர் மோடியும் ரஷிய அதிபர் புதினும் சீனாவில் நாளை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின்போதும் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com