ஜார்கண்ட் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஜார்கண்ட் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஜார்கண்ட் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

 ராஞ்சி,

ஜார்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நான்கு இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் வென்றன.

இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தனிப்பெரும் கட்சியாக வென்றது.இதையடுத்து, ஜார்கண்ட் கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், ஜார்கண்ட் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜார்கண்ட் கவர்னர் சந்தோஷ் கங்குவார் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிலையில், ஜார்கண்ட் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . 

X

Daily Thanthi
www.dailythanthi.com