மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர்; விளைவு ஒன்றுதான் - இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து


மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர்; விளைவு ஒன்றுதான் - இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.

இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றதாக குறிப்பிட்டு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், "விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர். விளைவு ஒன்றுதான் - இந்தியா வெற்றி பெற்றது! நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story