வெள்ளிப் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
வெள்ளிப் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம், 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிக்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில், முரளி ஸ்ரீசங்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஸ்ரீசங்கரின் வெள்ளிப்பதக்கம் மிகச் சிறப்பான சாதனை. அவரது அசாதாரணமான செயல்பாட்டுக்கும், தனது சிறந்த தாண்டுதலுடன் பதக்கம் வென்றதற்கும் எனது வாழ்த்துகள். அவரது வெற்றி, தடகளத்தில் சாதிக்க விரும்பும் பல இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். ஸ்ரீசங்கரின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள். என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com