அவைக்கு வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை: பிரியங்கா காந்தி

சபாநாயகருக்கு பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொள்கிறார் என்று பிரியங்கா காந்தி கூறினார்.
அவைக்கு வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை: பிரியங்கா காந்தி
Published on

மக்களவையில் பிரதமர் மோடி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்கத் திட்டமிட்டிருந்தபோது, சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு "முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை" செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்தது இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரைச் சபைக்கு வர வேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாகவும் ஓம் பிர்லா கூறியிருந்தார்.

Also Read
பிரதமர் மோடி பயந்துவிட்டார்; அதனால்தான் அவைக்கு வரவில்லை – பிரியங்கா காந்தி தாக்கு
அவைக்கு வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை: பிரியங்கா காந்தி

சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து பேசியுள்ள காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, பிரதமர் மோடிக்கு அவைக்கு வர துணிச்சல் இல்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி கூறியதாவது: அவைக்கு வர பிரதமருக்கு துணிச்சல் இல்லை; சபாநாயகருக்கு பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொள்கிறார் அவையில் இருக்கைக்கு முன்னால் 3 பெண்கள் நின்று கொண்டிருந்ததால் பிரதமருக்கு துணிச்சல் இல்லை இது என்ன முட்டாள்தனம்? அவையில் விவாதம் நடக்கவில்லை; காரணம் விவாதம் நடத்த அரசு விரும்பவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com