காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி லாவகமாக கையாள்வார் - நடிகர் ரஜினிகாந்த்

காஷ்மீரில் அமைதியை பிரதமர் மோடி கொண்டு வருவார் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி லாவகமாக கையாள்வார் - நடிகர் ரஜினிகாந்த்
Published on

மும்பை,

மும்பையில் இன்று 'வேவ்ஸ்' உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் நடிகர்கள் மோகன்லால், ரஜினிகாந்த், ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது, இரக்கமற்ற செயல். மோடியின் திறமையை ஒரு தசாப்தமாக நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். காஷ்மீர் விவகாரத்தை தைரியமாகவும் லாவகமாகவும் பிரதமர் மோடி கையாள்வார். பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவார்

பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துவதால், தேவையற்ற விமர்சனங்கள் காரணமாக அரசு, இந்த நான்கு நாள் நிகழ்வை ஒத்திவைக்கக்கூடும் என்று பலர் கூறினர். ஆனால் பிரதமர் மோடி மீதான எனது நம்பிக்கையின் காரணமாக இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அதன்படியே, இந்நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com