பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடக்கம்

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடக்கம்
Published on

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.

ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ்வை ரஷிய படைகள் நெருங்கி வருகின்றன. தற்போது தாக்குதல் தீவிரமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலால் உலக அளவில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருகிறது. நேட்டோ அமைப்பு தங்கள் உறுப்பு நாடுகளின் எல்லைகளில் படைகளை அதிகரித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் உள்ளிட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com