பிரதமரின் ஆதிதிராவிடர் மேம்பாட்டு திட்டம்: 18,093 கிராமங்கள் முன்மாதிரி கிராமங்களாக மாற்றம்

நாடு முழுதும் 18,093 கிராமங்கள் முன்மாதிரி கிராமங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

புதுடெல்லி,

பிரதமரின் ஆதிதிராவிடர் மேம்பாட்டு திட்டத்தில், நாடு முழுதும், 18 ஆயிரத்து 093 கிராமங்கள், முன்மாதிரி கிராமங்களாக வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளன. இத்திட்டத்தில், 785 மாணவர் விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன.

பிரதமரின் ஆதிதிராவிடர் மேம்பாட்டு திட்டம்

நாடு முழுதும், ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கி, அவற்றை முன்மாதிரி கிராமங்களாக மாற்றுவதே, பிரதமரின் ஆதிதிராவிடர் மேம்பாட்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்.

1,730 கோடி ரூபாய் நிதி

இத்திட்டத்தின் கிராம மேம்பாட்டு பிரிவின்கீழ், 47 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில், 18 ஆயிரத்து 93 கிராமங்கள், முன் மாதிரி கிராமங்களாக மற்றப்பட்டுள்ளன. இதன் மூலம், 47.79 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். கடந்த, 2021-22 முதல் 2025-26 வரை, மாநிலங்களுக்கு, 1,730 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், லட்சத்துக்கும் அதிகமான 2.5 தனிநபர்கள் மேம்பாட்டு வேலை மற்றும் குழுக்களுக்கு திறன் பயிற்சிகள், வாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மாணவர் விடுதிகள் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளைச் சேர்ந்த ஆதிதிராவிட மாணவர்கள் தரமான கல்வியை பெற தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

கடந்த செப்டம்பர் நிலவரப்படி, 785 விடுதிகள் கட்டி முடிக்கப்பட் டுள்ளன. 2026 நிதியாண்டில், 27 264 மாணவர்கள் தங்கும் வகையில் ஒரு மாணவர் விடுதி, ஒரு மாணவியர் விடுதி அமைக்க, 61.46 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தவும், கண்காணிக்கவும் தனி மொபைல் போன் செயலி மற்றும் இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com