உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கடுமையாக மோசமடைந்துள்ளது - யோகி ஆதித்யநாத் அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கடுமையாக மோசமடைந்துள்ளதாக, யோகி ஆதித்யநாத் அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கடுமையாக மோசமடைந்துள்ளது - யோகி ஆதித்யநாத் அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்
Published on

புதுடெல்லி,

செப்டம்பர் 14ம் தேதி உ.பி.யின் ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தப் பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தசூழலில் இன்று சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கடுமையாக மோசமடைந்துள்ளதாக, யோகி ஆதித்யநாத் அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டரில், கொடூர நடத்தையினால் தலித் பெண் சப்தர்ஜங் மருத்துவமனையில் இறந்து போய்விட்டார். 2 வாரங்களாக இந்தப் பெண் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடி வந்தார்.

ஹத்ரஸ், ஷாஜஹான்பூர், கோரக்பூர் என்று மாறி மாறி பாலியல் வன்கொடுமைகள் மாநிலத்தை உலுக்கி வருகின்றன. உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கடுமையாக மோசமடைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்புக்கான உத்தரவாதத்தின் சுவடு கூட இந்த மாநிலத்தில் இல்லை. குற்றவாளிகள் வெளிப்படையாகவே குற்றங்களைச் செய்து வருகின்றனர்.

இந்தப் படுபாதகத்தைச் செய்தவர்கள் தண்டனை பெற்றாக வேண்டும். யோகி ஆதித்யநாத் அவர்களே நீங்கள்தான் பெண்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பு என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com