அரசு பங்களாவை காலி செய்யும் பிரியங்கா காந்தி; பாஜக எம்.பி.க்கு பங்களா ஒதுக்கப்படுவதாக உத்தரவு

டெல்லியில் பிரியங்கா காந்தி தங்கியிருந்த அரசு பங்களா தற்போது பாஜக எம்.பி. அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு பங்களாவை காலி செய்யும் பிரியங்கா காந்தி; பாஜக எம்.பி.க்கு பங்களா ஒதுக்கப்படுவதாக உத்தரவு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் பிரியங்கா காந்திக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை, ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதிக்குள், காலி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த பங்களா தற்பேது பாஜக எம்.பியும், பாஜக ஊடக ஊடக செய்தி தெடர்பாளருமான அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஒன்றாம் தேதியுடன், பிரியங்கா காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உத்தரவையும் மத்திய அரசு ரத்து செய்தது. இதனையடுத்து, தற்பேது இந்த அரசு பங்களாவை, அனில் பலூனிக்கு ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. பிரியங்கா காந்தி வெளியேறிய பின்னர், பாஜக எம்.பி.யிடம் அரசு பங்களா ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com