

பெங்களூரு.
காவிரி விவகாரத்தில் கர்நாடகா மக்கள், விவசாயிகள் நலனை காப்பேன் என கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பற்றாக்குறையாக பெய்துள்ளது.இதனால் காவிரி படுகையில் ஹாரங்கியை தவிர மற்ற 3 அணைகளும் நிரம்பாமல் உள்ளன. குறிப்பாக கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பவில்லை. இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் இருந்து வருகிறது.
இதற்கிடையில், காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் வினா டிக்கு 3,500 கனஅடி நீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது மொத் தம் 45 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு விவ சாயிகள், கன்னட அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றன. அத்துடன் பெங்களூரு, மண்டியா, மைசூருவில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடந்து வருகிறது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிற 13-ந் தேதி முழு அடைப்பு நடத்த கன்னட கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது.
வருகிற 13-ந் தேதி காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரை முழு அடைப்பு நடை பெறும் என்றும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கன்னட கூட்ட மைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு கன்னட அமைப்புகள், தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு, வாடகை கார், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க மும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்து முடிவு எடுக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்தார் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கபினி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் நீர் பற்றாக்குறை உள்ளது. குடிநீரை கருத்தில் கொண்டு ஒத்துழைக்க தமிழக அரசும் கேட்டுக்கொண்டது. கர்நாடக மக்கள், விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மை. தமிழ்நாட்டுக்கு 15 நாட்கள் விநாடிக்கு 3,500 கன அடி உபரி நீர் திறக்க காவிரி ஆணையம் தெரிவித்திருந்தது.
தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் 2.9.டிஎம்சி நீர் திறக்கபட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் மூத்த தலைவர்கள், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் மட்டும் 2.9 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தேவைக்காக 40 டிஎம் சி தண்ணீர் கட்டாயம் இருப்பு இருக்க வேண்டும். அரசின் முடிவுக்கு கர்நாடக தலைவர்கள் அனைவரும் ஒத்துழைப்பதாக உறுதி அளித்துள்ளனர். காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்திடமிருந்து பல கோரிக்கை வந்துள்ளது. காவிரி விவகாரத்தில் திமுக தனியாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளது.
விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் முழு அடைப்பு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தில் கூறியதுபோல் காவிரி விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும். நான் விவசாயியின் மகன், விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடக காங்கிரஸ் நிற்கும். காவிரி விவகாரத்தில் கர்நாடகா மக்கள், விவசாயிகள் நலனை காப்பேன்.
தற்போதைய சூழல் அமைதியடைந்த பின் தமிழ்நாடு முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் மேகதாது திட்டத்தால் தமிழ்நாடே அதிகளவில் பயன்பெறும். மேகதாது திட்டத்தின் விரிவான அறிக்கையை திருத்தி மீண்டும் அனுப்ப உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.