டெல்லியில் போராட்டம்: பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் கைது

மாணவர் அமைப்பு தலைவரான நேஹா போரா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
னராயி விஜயன், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் கைது
Published on: 

புதுடெல்லி,

முக்கிய தலைவர்கள் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ள போதும் டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி படையெடுக்கும் இளைஞர் பட்டாளம்.. மீண்டும் மீண்டும் கைது செய்யும் போலீஸ்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷ னர் ஞானேஷ் குமார் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், அவர் பதவி விலக கோரியும் காங்கிரசார் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் 4-வது நாளாக போராடி வருகின்றனர்.

கரப்பான் பூச்சி கட்சி

இதனிடையே, தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக கோரி, டில்லி ஜந்தர் மந்தரில் இன்று (அக் 10) போராட்டம் நடத்தப்போவதாக கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்தனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறவிருக்கும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தை கட்டுப்படுத்த 25 ஆயிரம் போலீசார், 300 கண்காணிப்பு கேமராக்கள், கைது செய்யப்படுபவரை அடைத்து வைப்பதற்காக மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

கெஜ்ரிவால், மம்தா கைது

இந்தநிலையில், போராட்டக் களத்துக்கு வந்த கெஜ்ரிவால், மம்தா, பினராயி விஜயன் உள்ளிட்டோரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

மேற்கு வங்க முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி டெல்லி சவுத் அவென்யூ பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன், டோலா சென் உள்ளிட்டோருடன் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.

டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி போலீசால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார். டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

டெல்லி முழுவதும் தடை உத்தரவு

இவர்களை தவிர, ஜந்தர் மந்தர் செல்லும் வழியில் ஆங்காங்கே கூடியிருந்த 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிஜேபி அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்கள் ஆதரவாளர்கள் பலரையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தியும் கைது செய்தும் வருகின்றனர். அசாம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மத்திய டெல்லி முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிஜேபி நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க சுப்ரீம் கோர்ட்டில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாகச் சென்ற வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

டெல்லியில் நேஹா போரா கைது

மாணவர் அமைப்பு தலைவரான நேஹா போரா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்

போராட்டத்தில் ஈடுபட முயன்ற நேஹா போராவை காவல்துறையினர் தடுத்து கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். மாணவர்கள் போராட்டம், அரசியல் கட்சியினர் போராட்டத்தால் டெல்லி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com