டெல்லியில் வங்காள தேச தூதரகம் முன் போராட்டம்


டெல்லியில் வங்காள தேச தூதரகம் முன் போராட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2025 12:54 PM IST (Updated: 23 Dec 2025 1:38 PM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது.

புதுடெல்லி,

வங்காள தேச தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞரை அந்நாட்டு போராட்டக்காரர்கள் கடந்த வாரம் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியாவா பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், இதனைக் கண்டித்து டெல்லி, திரிபுரா மற்றும் மேற்கு வங்காள தேசத்தில் உள்ளஉள்ள வங்கதேச தூதரகங்களுக்கு வெளியே இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மூன்று தூதரகங்களிலும் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக வங்காள தேசம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகத்துக்கு வெளியே பல்வேறு இந்து அமைப்பினர் ஒன்றிணைந்து இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, அப்பகுதியைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் வங்காள தேச தூதரகங்களுக்கு வெளியே நடைபெற்று வரும் போராட்டம் குறித்து விளக்கமளிக்க, வங்காள தேசத்தில் உள்ள இந்திய தூதரை நேரில் ஆஜராக அந்நாட்டு வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதனிடையே வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன் விஸ்வ இந்து பரிஷத் போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story