

திருவனந்தபுரம்,
நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் துர்காஷ்டமியை முன்னிட்டு, கேரளா மாநிலம் முழுவதும் அக்டோபர் 19-ந் தேதி (திங்கட்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது நிர்வாகத் துறை வெளியிட்ட அறிவிப்பில்,
கேரள மாநிலத்தில் நவராத்திரியின் எட்டாம் நாளான துர்காஷ்டமியான அக். 19ல் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மாற்றுமுறை ஆவணங்கள் சட்டத்தின் கீழ் வரும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகை விடுமுறைகளுக்கு முன்னதாக இந்த விடுமுறை வருவதால், மாநில மக்கள் மகிழச்சியடைந்துள்ளனர்.
கேரள கவர்னர் சார்பில், கூடுதல் செயலாளர் அனில் ஜானி கையெழுத்திட்டு இந்த உத்தரவு அக்டோபர் 16-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது.