புதுச்சேரியில் ஆதிதிராவிட நலத்துறை மந்திரி சாய் சரவணகுமார் ராஜினாமா

புதுச்சேரியில் ஆதிதிராவிட நலத்துறை மந்திரி சாய் சரவணகுமார் ராஜினாமா
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் ஆதிதிராவிட நலத்துறை மந்திரியாக இருந்து வந்தவர் சாய் ஜெ சரவணன் குமார். இவர் ஊசுடு தெகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார். பாஜக எம்எல்ஏவான இவருக்கு புதுவை சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மந்திரி பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை மந்திரி பதிவியை சாய் ஜெ சரவணன் குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து, அவர் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், பாஜக தலைமை உத்தரவிட்டதன் பேரில், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார்.

திடீரென அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதற்கு என்ன காரணம் என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே, ஆதிதிராவிடர் நலத்துறை மந்திரி பதவியில் இருந்த சந்திர பிரியங்கா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், சாய் ஜெ சரவணன் குமாரும் மந்திரி பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்.ஆர். காங்கிரஸ் உடன் பாஜக கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் நடைபெறும் நிலையில் மந்திரி ராஜினாமா செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com