புதுச்சேரி: ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்குக்கு தீபாவளி பரிசு ரூ.1,000

47,180 குடும்ப பங்கீட்டு அட்டைககளில் உள்ள 1,33,890 பயனாளிகள் நேரடியாக பயனடைய உள்ளனர்.
புதுச்சேரி: ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்குக்கு தீபாவளி பரிசு ரூ.1,000
முதல்-மந்திரி ரங்கசாமி
Published on: 

புதுச்சேரி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான அரசு இரட்டை அறிவிப்புகளை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இலவச வேட்டி, சேலைக்கு பதில் ரூ.1,000 ரொக்கம்

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அதற்கு மாற்றாக, பயனாளிகளின் வங்கி கணக்கிலேயே நேரடியாக ரூ.1,000 ரொக்கப்பணம் வரவு வைக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

47,180 பயனாளிகள்

அரசின் இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 47,180 குடும்ப பங்கீட்டு அட்டைககளில் உள்ள 1,33,890 பயனாளிகள் நேரடியாக பயனடைய உள்ளனர். பொதுமக்களின் வங்கி கணக்கில் இந்த பணத்தை செலுத்துவதற்காக ரங்கசாமி அரசு ரூ.13.38 கோடி நிதியை ஒதுக்கி, அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

அனைத்து கார்டுதாரர்களுக்கும் ரூ.700 தீபாவளி தொகுப்பு

இது ஒருபுறமிருக்க, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.700 மதிப்புள்ள தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்கும் பணிகளும் ஏற்கனவே தொடங்கி, மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மகிழ்ச்சி

அரசின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் புதுச்சேரி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட அரசு தங்களுக்கு அள்ளிக்கொடுத்துள்ளதாக பொதுமக்கள் முதல்-மந்திரிக்கு தங்களது நன்றியினை தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com