புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் - நாராயணசாமி, கனிமொழி எம்.பி. பங்கேற்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் நடந்த போராட்டத்தில் நாராயணசாமி, கனிமொழி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லியில் போராட்டம் - நாராயணசாமி, கனிமொழி எம்.பி. பங்கேற்பு
Published on

புதுடெல்லி,

யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்துக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், கவர்னர் கிரண்பெடியை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில அந்தஸ்து போராட்டக்குழு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடைபெற்றது. தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 21 கட்சிகள் கலந்துகொண்ட போராட்டத்துக்கு புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தி.மு.க. எம்.பி. கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக-புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com