மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவு: ராகுல் காந்தி டுவிட்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் அளிக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவு: ராகுல் காந்தி டுவிட்
Published on

புதுடெல்லி,

பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, 2010-ல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றபடவில்லை.

முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகள், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், மசோதா கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், விரைவில் கூட உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ராகுல் காந்தி, பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை இணைத்து, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், இந்த தகவலை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com