

புதுடெல்லி
3 மாநிலங்களில் நடந்த அதிரடி சோதனையில் ரூ.100 கோடி ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டதுடன், 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாட்டின் எல்லை பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிப்பது, கடத்தலை தடுப்பது தொடர்பாக ஆபரேசன் டிரைடன்ட் என்ற பெயரில் அசாம், மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய 3 மாநிலங்களில் 38 இடங்களில் மத்திய முகமைகள் மற்றும் போலீஸ் படைகள் இணைந்து சோதனையில் ஈடுபட்டன.
இந்த நடவடிக்கையின்போது, ரூ.100 கோடி மதிப்பிலான சட்டவிரோத ஹவாலா பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 500 டெட்டனேட்டர்கள் பறிமதல் செய்யப்பட்டன. ரூ.12 லட்சம் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது. 1,424 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதுடன், ரூ.17.82 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டன.
வங்காளதேசம் மற்றும் மியான்மர் எல்லை பகுதிகளில் இந்த கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து சர்வதேச கும்பலுக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.