ராஜஸ்தான்: சாலை போடும் பணியில் மின்சாரம் தாக்கி 8 தொழிலாளர்கள் பலி

ராஜஸ்தான்:  சாலை போடும் பணியில் மின்சாரம் தாக்கி 8 தொழிலாளர்கள் பலி
Published on: 

ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில், சாலை போடும் பணியின்போது மின்சாரம் தாக்கி 8 தொழிலாளர்கள் பலியானார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம் சாபோலி கிராமத்தில் சாலை போடும் பணி நடந்தது. சாபோலியையும், கடம்குண்டுவையும் இணைக்கும் குறுகிய சாலையை போட்டுக்கொண்டிருந்தனர். சரளைக்கற்களை கலக்கும் எந்திரம் பயன்படுத்தி, வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி, எந்திரத்தின் மீது பட்டது.

8 பேர் பலி

எந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து, அதை தொட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில், 8 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இதுதவிர, 3 பெண்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

X