பீகார் உள்பட 3 மாநிலங்களில் காலியாக உள்ள 11 எம்.பி இடங்களுக்கு இன்று தேர்தல்

பிகார், அரியானா மாநிலங்களில் காலியாகும் இடங்களின் எண்ணிக்கையை விட வேட்பாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.

பீகார் உள்பட 3 மாநிலங்களில் காலியாக உள்ள 11 எம்.பி இடங்களுக்கு இன்று தேர்தல்
Published on

மராட்டியம் 7 இடங்கள், தமிழ்நாடு 6 இடங்கள், மேற்கு வங்கம், பிகாரில் தலா 5 இடங்கள், ஒடிசாவில் 4 இடங்கள், அசாம் 3, சத்தீஷ்கர், அரியாணா, தெலங்கானா மாநிலங்களில் தலா 2 இடங்கள், ஹிமாசல பிரதேசத்தில் ஓரிடத்திற்கு திங்கள்கிழமை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பிகார், அரியானா, ஒடிசாவில் உள்ள 11 இடங்களைத் தவிர்த்து, மற்ற மாநிலங்களில் 26 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

பிகார், அரியானா மாநிலங்களில் காலியாகும் இடங்களின் எண்ணிக்கையை விட வேட்பாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. அதனால் அங்கு தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் 4 உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக தரப்பில் 3 வேட்பாளர்கள், பிஜு ஜனதா தளம் சார்பில் 1 வேட்பாளரும் போட்டியிடுகின்றனர். இது தவிர பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவுடன் ஒரு பொதுவேட்பாளரும் களத்தில் உள்ளார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள், வாக்குப்பதிவு முடிந்ததும் எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com