நாடாளுமன்ற மாநிலங்களவை வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.
நாடாளுமன்ற மாநிலங்களவை வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை
Published on

டெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு கடந்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற்றது.

இதையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்ட அமர்வு கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் வரும் 19, 20 ஆகிய இரு தினங்கள் மாநிலங்களவைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்களை ஈடுசெய்ய வரும் 28,29 ஆகிய தினங்களில் மாநிலங்களவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com