

அமராவதி,
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சிறை வளாகத்தின் முன்பு நின்று பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "ராஜமுந்திரி சிறையுடன் ஒரு செல்பி... அவர்(சந்திரபாபு நாயுடு) உள்ளே, நான் வெளியே" என்று பதிவிட்டுள்ளார். சிறை வளாகத்தின் முன்பு இயக்குனர் ராம் கோபால் வர்மா செல்பி புகைப்படம் எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Ram Gopal Varma (@RGVzoomin) October 26, 2023 ">Also Read: