

புதுடெல்லி,
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு உள்ளது.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டர் கணக்கு சமூக விரோதிகளால் முடக்கப்பட்டு உள்ளது என அவர் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்து உள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டு உள்ளது. துருக்கியை சேர்ந்த பாகிஸ்தான் ஆதரவு அமைப்பால் இந்த டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது பாலிவுட் நடிகர் அனுபம் கெர், பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு, மாநிலங்களை எம்.பி. சுவாபன் தாஸ்குப்தா ஆகியோரது டுவிட்டர் கணக்குகளும் பாகிஸ்தான் ஆதரவு அமைப்பால் முடக்கப்பட்டு உள்ளது. ஹேக்கிங் செய்யப்பட்ட டுவிட்டர் கணக்குகளை நிறுவனம் சஸ்பெண்ட் செய்து உள்ளது. பிரபலங்களில் உண்மையான கணக்குதான் என்பதை உறுதி செய்யும் வகையில் பயன்படுத்தப்படும் டிக் குறியீடு எடுத்துவிடப்பட்டு உள்ளது.