

புதுடெல்லி,
ஜம்மு - காஷ்மீரின் காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக ராமன் பல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக ராமன் பல்லாவை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.