கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் ரனில் விக்ரமசிங்கே வழிபாடு

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் ரனில் விக்ரமசிங்கே வழிபாடு செய்தார்.
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் ரனில் விக்ரமசிங்கே வழிபாடு
Published on

உடுப்பி,

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு மூகாம்பிகையை வழிபட்ட ரனில் விக்ரமசிங்கே, இலங்கை மக்களின் நலனுக்காக நவசண்டிகா ஹோமமும் நடத்தினார்.

முன்னதாக மங்களூரு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவர் கோவிலை அடைந்தார். அந்த பகுதியில் கனமழை பெய்ததால் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்தார்.

ரனில் விக்ரமசிங்கேவின் வருகையையொட்டி கொல்லூரில் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. தனியார் வாகனங்கள் கொல்லூர் நகரில் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com