தொண்டர்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லையென்றால் பதவி விலக தயார்-உத்தவ் தாக்கரே

நம்முடைய சாதாரண தொண்டர் களில் யாராவது ஒருவர் அடுத்த உத்தவ் சிவசேனா தலைவ ராக பொறுப்பேற்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்

தொண்டர்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லையென்றால் பதவி விலக தயார்-உத்தவ் தாக்கரே
Published on

மராட்டிய அரசியலில் கடந்த நான்கு ஆண்டுகளில் 2-வது முறையாக சிவ சேனா கட்சிக்குள் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தவ் தாக்கரே தலைமை யிலான உத்தவ் சிவசேனா கட்சியின் 9 மக்களவை எம்.பி.க்களில், 6 பேர் தனியாக பிரிந்து கலகக்கொடி தூக்கி யுள்ளனர். இந்த சூழ்நிலையில் சிவசேனா கட்சியின் இரு அணிகளும் நேற்று கட்சியின் 60-வது ஆண்டு நிறுவன நாள் விழாவை கொண்டாடின. மும்பை மாட்டுங்கா சண்முகானந்தா அரங்கில் உத்தவ் சிவசேனா சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசி னார். அப்போது அவர் மேடையில் மிகவும் உருக்கமாக பேசி யதாவது:-

துரோகிகளிடம் ஒப்படைக்கமாட்டேன்

நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கட்சியை வழிநடத்தி வருகிறேன். என் மீது தொடர்ந்து பல்வேறு சவால் களும், அரசியல் தாக்குதல்களும் தொடுக்கப்பட்டு வருகின் றன. இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் நான் என் மன உறுதியை இழக்கவில்லை, சளைக்காமல் நின்று போராடி வருகிறேன். வருகிறேன.இருப்பினும், என் கட்சியின் தொண்டர்களுக்கோ அல்லது நிர் வாகிகளுக்கோ என் மீது நம்பிக்கையும், பாசமும் இல்லை என்று தெரிந்தால், நான் இந்த தலைவர் பதவியில் இருந்து இப்போதே விலக தயாராக இருக்கிறேன்.

என்னை பொறுத்தவரை, நம்முடைய சாதாரண தொண்டர் களில் யாராவது ஒருவர் அடுத்த உத்தவ் சிவசேனா தலைவ ராக பொறுப்பேற்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால், எந்த காலத்திலும் நம்முடைய பாரம்பரியமிக்க இந்த கட்சியை துரோகிகள் மற்றும் திருடர்களின் கையில் ஒப்ப டைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

s

X

Daily Thanthi
www.dailythanthi.com