டெல்லியில் ராஜபாதையின் பெயரை மாற்றியதில் அரசியல்.!! - சசிதரூர் குற்றச்சாட்டு

டெல்லியில் ராஜபாதையின் பெயரை மாற்றியதில் அரசியல் இருப்பதாக சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார். அப்போது இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக பல இடங்களுக்கு பெயர் மாற்றப்பட்டு இருப்பது குறித்து அவர் பேசினார்.

அவர் கூறும்போது, 'ஆங்கிலேயர்களின் தெளிவற்ற பெயர்களைக் கொண்ட இடங்களின் பெயரை மாற்றுவதையும், அதற்கு பதிலாக இந்தியர்களின் பெயரை சூட்டி கவுரவப்படுத்துவதையும் நான் ஆதரிக்கிறேன். ஆனால் பம்பாய், மெட்ராஸ் மற்றும் கல்கத்தா போன்ற நகரங்களின் பெயர் மாற்றம், உண்மையில் என்ன சாதித்தது என்று எனக்கு தெரியவில்லை' என கூறினார்.

டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதையை, கடமைப்பாதை என பெயர் மாற்றியது குறித்து சசிதரூர் கூறுகையில், 'இது வெறும் அரசியல். அதற்கு மேல் எதுவும் இல்லை. ஏனெனில் ராஜ்பாத் (ராஜபாதை) என்பதே ஒரு இந்தி வார்த்தைதான். இதுபோன்ற விஷயங்கள் குறித்து பரவலாக விவாதிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com