

மும்பை,
மும்பை சர்வதேச விமான நிலையத்தின் 1-வது முனையத்தின் சீரமைப்புப் பணிகளுக்காக, 2-வது முனையத்தில் இருந்து இயக்கப்படும் 265 சர்வதேச வாராந்திர விமான சேவைகளை நிறுத்த விமான நிலைய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது வருகிற 26-ந் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்த அதிரடி முடிவுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட 46 சர்வதேச விமான நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த திடீர் மாற்றத்தால் பயணிகளின் விமான இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றும், பண்டிகை காலத்தில் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் விமான நிறுவனங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.