

புதுடெல்லி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான ஓட்டெடுப்பு, மார்ச் மாதம் நடக்கிறது.
இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் சிவசேனா உறுப்பினர் அனில் தேசாய் இப்பிரச்சினையை எழுப்பினார். அவர் பேசுகையில், நமது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்து நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், வேறு நாடுகள் இதில் கருத்து தெரிவிக்க உரிமை இல்லை. ஆகவே, ஐரோப்பிய கூட்டமைப்புக்கு எதிராக நாம் ஒருமனதாக இந்த சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். இதே கோரிக்கையை மேலும் சில உறுப்பினர்களும் விடுத்தனர். அதற்கு சபைத்தலைவர் வெங்கையா நாயுடு, இந்த சட்டம், இந்தியாவின் உள்விவகாரம். இதில் பிற நாடுகள் தலையிட உரிமை இல்லை என்று கூறினார்.