

புதுடெல்லி,
கடந்த ஓராண்டில் மட்டும் 42 அத்தியாவசியப் பொருட்களில் 41 பொருட்களின் சில்லறை விலைகள் உயர்ந்துள்ளன. இதில் வெங்காயத்தின்விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய புள்ளி விவர அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச அளவான 5.5சதவீதத்தை எட்டியதற்கு காரணம் உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலையே ஆகும். செப்டம்பர் மாதத்தில், ஆண்டுக்காண்டு உணவுப் பணவீக்கம் 7.74தவீதமாக இருந்தது.
இதில் உருளைக்கிழங்கு மட்டும் விதிவிலக்காகும். வெங்காயத்தின் விலை கிட்டத்தட்ட 113 சதவீதம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சர்க்கரை 22 சதவீதம் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் 18 சதவீதமாக விலைகளும் உயர்ந்துள்ளன. செப்டம்பர் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச அளவான 5.5 சதவீதம் எட்டியதற்கு, உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலையே ஒரு முக்கியக் காரணியாக விலையே ஒரு முக்கியக அமைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில், ஆண்டுக்காண்டு உணவுப் பணவீக்கம் 7.74 சதவீதம் ஆக இருந்தது.
பல்வேறு பண்ட வகைகளில் உள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பருப்பு வகைகளில், துவரம் பருப்பின் சராசரி சில்லறை விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.113 ஆக இருந்த இதன் விலை ரூ.129 ஆக அதிகரித்துள்ளது. நான்கு பெருநகரங்களிலும் இதன் விலை கிலோவுக்கு ரூ.140 முதல் ரூ.145 வரை அதிகமாக இருந்தது. கடலைப்பருப்பின் சராசரி விலை, ஓராண்டுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.85 ஆக இருந்த நிலையில் இப்போது 6.4 சதவீதம் உயர்ந்து கிலோவுக்கு ரூ.91 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் அரசு தனது கையிருப்பிலிருந்து கடலைப் பருப்பை விரைவில் வெளியிடுவது குறித்து பரிசீலிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஓராண்டுக்கு முன்பு லிட்டருக்கு ரூ.188 ஆக இருந்த கடுகு எண்ணெய் விலையும், தற்போது ரூ.204 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சாதாரண அரிசியின் சராசரி விலை கிலோவுக்கு ரூ. 47 ஆக 12சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம், கோதுமை மற்றும் கோதுமை மாவு விலைகளின் உயர்வு மிகக் குறைவாகவே உள்ளது. சர்க்கரையின் விலை, ஒரு மாதத்திற்கு முன்பு கிட்டத்தட்ட ரூ.59ஆக இருந்த நிலையில் இருந்து ரூ.56 ஆகக் குறைந்திருந்தாலும், அது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட 22 சதவீதம் அதிகமாகவே உள்ளது. நாட்டின் மிகப்பெரிய வெங்காய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவில், சாகுபடிப் பரப்பு குறைக்கப்பட்டதாலும், பருவமழை தாமதமானதாலும், வெங்காய உற்பத்தியில் 57 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.