போலி டிரேடிங் செயலி மூலம் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.45 லட்சம் மோசடி - வங்கி அதிகாரி உள்பட 3 பேர் கைது

கைது செய்யப்பட்ட கமல் பாண்டே, ஒரு தனியார் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
போலி டிரேடிங் செயலி மூலம் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.45 லட்சம் மோசடி - வங்கி அதிகாரி உள்பட 3 பேர் கைது
Published on

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர், மொபைல் செயலி மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி மர்ம நபர்கள் சிலர் தன்னிடம் ரூ.45.33 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, சம்பந்தப்பட்ட டிரேடிங் செயலி போலியானது என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, பணப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகள், செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்களை வைத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த கபில் பெயின்(25), மனோஜ் சர்மா(26) மற்றும் கமல் பாண்டே(24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கமல் பாண்டே, ஒரு தனியார் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com