பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா பிற்போக்குத்தனமானது - ஒவைசி சாடல்

பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா பிற்ப்போக்குத்தனமான சட்டத்திருத்தம் என அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா பிற்போக்குத்தனமானது - ஒவைசி சாடல்
Published on

புதுடெல்லி,

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21-ஆக உயர்த்தும் குழந்தை திருமண தடுப்பு திருத்த மசோதா 2021 மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு ஐதராபாத் எம்.பி.யும், அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் விவாதத்தின் போது பேசிய ஒவைசி, இந்த மசோதா பிற்போக்குத்தனமான சட்டத்திருத்தமாகும். இது சட்டம் 19-ன் கீழ் அடிப்படை சுதந்திர உரிமைக்கு எதிரானது. 18 வயது நிரம்பியவர் பிரதமரை தேர்வு செய்யலாம். திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம். ஆனால், திருமணம் செய்யும் உரிமையை தடுக்கிறீர்கள். 18 வயதில் நீங்கள் என்ன செய்தீர்கள். பெண் தொழிலாளர்கள் பங்களிப்பு சோமாலியாவை விட இந்தியாவில் குறைவாக உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com