பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் காரணம்: பெட்ரோலியத் துறை மந்திரி விளக்கம்

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச அளவில் சமீபத்திய கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் காரணம் என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் காரணம்: பெட்ரோலியத் துறை மந்திரி விளக்கம்
Published on

விலை உயர்வு குறித்து கேள்வி

குஜராத் மாநிலம் வதோதராவில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு குஜராத் அரசு, ஐ.ஓ.சி. இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு காந்திநகரில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருந்த மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி தர்மேந்திர பிரதானிடம், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து நிருபர்கள் கேட்டனர்.

சர்வதேச சந்தையில் அதிகரிப்பு

அதற்கு தர்மேந்திர பிரதான் அளித்த பதில் வருமாறு:-

பெட்ரோலிய பொருட்களின் விலை கூடிவிட்டது. அதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70 டாலர்களுக்கு மேல் அதிகரித்திருப்பதுதான். நாம் நமது எண்ணெய் தேவையில் 80 சதவீதம் வரை இறக்குமதி செய்வதால், சர்வதேச விலை உயர்வு நம்முடைய நுகர்வோருக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஜி.எஸ்.டி. வரம்புக்குள்...

பெட்ரோல், டீசலின் விலை, சர்வதேச சந்தையால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தப் பிரிவின் பொறுப்பாளராக, பெட்ரோல், டீசலும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்தும். ஆனால் அதுகுறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல் பங்குகளில் நீங்கள் பணம் செலுத்தும்போது, மோடி அரசின் பணவீக்க உயர்வை உணர்வீர்கள். வரி வசூல் தொற்று அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன என்று குற்றம்சாட்டியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com