ரோஹிங்யாக்கள் விவகாரத்தில் மியான்மரை விமர்சிக்கும் பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டது

ரோஹிங்யாக்கள் விவகாரத்தில் மியான்மரை விமர்சிக்கும் பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டு உள்ளது.
ரோஹிங்யாக்கள் விவகாரத்தில் மியான்மரை விமர்சிக்கும் பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டது
Published on

இஸ்லாமாபாத்,

மியான்மரின் ராகினேவில் ராணுவம் மற்றும் புத்த மதத்தினர் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். அங்கிருந்து உயிர்தப்பிக்க 5 லட்சம் வரையிலான ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர். ராகினேவில் இருந்து இஸ்லாமியர்கள் வெளியேறும் விவகாரத்தில் பாகிஸ்தான், மியான்மரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இப்போது பாகிஸ்தானில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பான தகவல்கள் வெளியாகி அந்நாட்டை மூக்குடைத்து உள்ளது.

மியான்மரில் இஸ்லாமியர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாகவே கடுமையான விமர்சனத்தை முன் வைத்து உள்ளது. இருப்பினும் பாகிஸ்தானில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மியான்மரில் முந்தைய காலகட்டங்களிலும் ராணுவம் மற்றும் புத்த மதத்தினரின் அட்டூழியம் அரங்கேறியது. அப்போது தப்பியவர்கள் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, வங்காளதேசம், மலேசியா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். பாகிஸ்தானில் கராச்சியில் தங்க வைக்கப்பட்டு உள்ள ரோஹிங்யாக்கள் மிகவும் ஆதரவற்றவர்கள் போன்று உணர்வதாக குற்றம் சாட்டிஉள்ளனர்.

கராச்சியில் முகாமில் உள்ள ரோஹிங்யா முபிஸ் உர் ரகுமான் பேசுகையில், நான் ஒரு ரோஹிங்யா, ஆனால் பாகிஸ்தான் ரோஹிங்யா. நான் பெங்காலி பேசுகிறேன், எனவே அவர்கள் எங்களை பெங்காலி என்றே அழைக்கிறார்கள். எங்களை பாகிஸ்தானியர்களாக அவர்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது, என்றார். பாகிஸ்தானில் நாங்கள் மோசமான நிலையிலே நடத்தப்படுகிறோம் என்பது ரோஹிங்யாக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com