சினிமா பாணியில் மணமேடையில் கைது செய்யப்பட்ட ரவுடி... தாலி கட்டும் வரை விடக்கோரி கதறி அழுத மணமகள்

தனது வாழ்க்கை நாசமாகிவிடும் என போலீசாரிடம் மணப்பெண் சீமா பரிதாபத்துடன் கூறினார்.
சினிமா பாணியில் மணமேடையில் கைது செய்யப்பட்ட ரவுடி... தாலி கட்டும் வரை விடக்கோரி கதறி அழுத மணமகள்
Published on

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில், ‘சட்டவிரோத கும்பல்’ (Illegal Gang) என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒரு ரவுடி கும்பல் இயங்கி வந்துள்ளது. இந்த கும்பலின் தலைவராக ஆகாஷ் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்த கும்பலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் கழுத்தில் ‘சட்டவிரோத கும்பல்’ என்று பச்சை குத்தி சுற்றித் திரிந்துள்ளனர். இந்த கும்பலின் தலைவர் ஆகாஷ் மீது கொலை உள்பட 31 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 18-ந்தேதி பா.ஜ.க. இளைஞர் அணி துணை தலைவர் சுரேந்திர குஷ்வா என்பவரை கொலை செய்த வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்டு, சுமார் 18 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

மேலும், இந்த ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் 26 வயதான மதபோதகர் ஒருவரை கடத்தி வைத்துக் கொண்டு, ரூ.8 லட்சம் பணம் கேட்டுள்ளனர். பணத்தை கொடுக்கவில்லை என்றால் அவரை பாலியல் புகாரில் சிக்க வைத்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதற்கிடையில், அந்த மதபோதகர் ரவுடி கும்பலிடம் இருந்து தப்பி வந்து, கடந்த மார்ச் 11-ந்தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையில் மணப்பெண் சீமா போலீசாரிடம், ‘எனது வாழ்க்கை நாசமாகிவிடும். நான் என்ன தவறு செய்தேன். அவர் செய்த குற்றங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. விருந்தினர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். திருமண சடங்குகள் முடிந்துவிட்டன. அவர் எனக்கு தாலி கட்டும் வரை, 2 மணி நேரம் மட்டும் அவரை விட்டு விடுங்கள்’ என்று பரிதாபத்துடன் கூறி கதறி அழுதார்.

ஆனால் அவரது கோரிக்கைகளுக்கு போலீசார் செவி சாய்க்கவில்லை. அவரை விட முடியாது என்றால் காவல் நிலையத்தில் வைத்தாவது தங்கள் திருமணத்தை நடத்த அனுமதிக்குமாறு சீமா கேட்டுள்ளார். ஆனால் போலீசார் அதற்கும் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. ஆகாஷுடன் சேர்த்து அவரது கூட்டாளிகள் 5 பேரை கைது செய்த போலீசார், அனைவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com