ரூ.1.05 கோடி வைர கிரீடம்: ஷீரடி சாய்பாபாவுக்கு ஆந்திர பக்தர் காணிக்கை

மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை குறிக்கும் வகையில் ‘தசாவதார’ கலைநயத்துடன் இந்த கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வைர கிரீடம்
Published on

மும்பை,

குரு பூர்ணிமாவை முன்னிட்டு, ஷீரடி சாய் பாபாவுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான வைரம் பதிக்கப்பட்ட தங்க கிரீடம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வந்து இதனை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

பக்தரின் காணிக்கை

ஆந்திரா மாநிலம், நெல்லூரை சேர்ந்த மல்லாடி சீனிவாச ராவ் என்ற பக்தர், சாய் பாபா மீது மிகுந்த பக்தி கொண்டவர். இவர் இந்த ஆண்டு குரு பூர்ணிமா விழாவையொட்டி, பாபாவுக்கு சிறப்பு காணிக்கை செலுத்த முடிவு செய்தார். இதற்காக, ரூ.1.05 கோடி மதிப்பில் பிரம்மாண்ட தங்க கிரீடம் ஒன்றை தயாரித்தார்.

தசாவதார வடிவமைப்பு

இந்த கிரீடம் 642 கிராம் தூய தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இதில் விலைமதிப்பற்ற வைரங்கள் மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை குறிக்கும் வகையில் ‘தசாவதார’ கலைநயத்துடன் இந்த கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது பார்ப்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

குடும்பத்துடன் ஒப்படைப்பு

ஷீரடியில் நடைபெற்ற குரு பூர்ணிமா விழாவில், மல்லாடி சீனிவாச ராவ் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். பின்னர், ஷீரடி சாய் பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை அதிகாரிகளை நேரில் சந்தித்து, இந்த வைர கிரீடத்தை பாபா பாதத்தில் சமர்ப்பித்தார். இந்த நெகிழ்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com