

திருமலை,
எச்.சி.எல். டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சிவ் நாடார் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும், பெர்டு அறக்கட்டளைக்கு அவர், ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கினார்.
இதற்கான காசோலையை கோவில் துணை நிர்வாக அதிகாரி ஹரேந்திரநாத்திடம் அவர் வழங்கினார்.