

அமராவதி
ஆனால் அவற்றை புழக்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரவில்லை. நமக்கு ரூ 2,000 மற்றும் ரூ 500 மதிப்புள்ள நோட்டுக்கள் தேவையில்லை. குறைந்த மதிப்புடைய ரூ 200 மற்றும் 100 நோட்டுக்களே போதும். நாம் பெருமளவில் இணையதள வசதிகளை பயன்படுத்தினால் இறுதியில் ஊழலை ஒழித்து விடலாம் என்று கூறினார் சந்திரபாபு நாயுடு.
தேர்தல் சமயத்தில் இவற்றின் விநியோகத்தை கட்டுப்படுத்தலாம் என்பதே நாயுடுவின் கருத்து. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நாயுடு ஆதரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பரிமாற்றங்களை மேம்படுத்தும் மாநில முதலமைச்சர்கள் குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக நாயுடுவை மோடி நியமித்தார்.