திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறவைகளை விரட்ட தினமும் ரூ.3.24 லட்சம் செலவு


திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறவைகளை விரட்ட தினமும் ரூ.3.24 லட்சம் செலவு
x

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறவைகளை விரட்ட பட்டாசுகள் வெடிப்பதற்காக 30 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் தரை இறங்கும் விமானங்களுக்கு பறவைகள் பெரும் தொல்லையாக உள்ளன. இந்த நிலையில் விமானங்கள் புறப்படும்போதும் தரை இறங்கும்போதும் பறவைகளை விரட்டுவதற்காக பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இதற்காக 12 இடங்களில் 30 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராக்கெட்டுகள், குண்டுகள் மற்றும் மேலே சென்று மூன்றாக பிரிந்து வெடிக்கும் ஸ்கை ஷாட் உள்ளிட்ட பட்டாசுகள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.3.24 லட்சம் செலவு செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 11 கோடியே 82 லட்சத்து 60 ஆயிரம் செலவாகிறது.

பட்டாசு வெடிப்பதற்காக 2 ஷிப்டுகளில் மொத்தம் 30 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 24 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. பட்டாசு வெடிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே ஒரு மாத சம்பளத்திற்கு ஆகும் செலவு ரூ.7.20 லட்சம் ஆகும்.

1 More update

Next Story