கலப்பு திருமணத்துக்கு ஆர்.எஸ்.எஸ். எதிரி அல்ல - மோகன் பகவத்

கலப்பு திருமணத்துக்கு ஆர்.எஸ்.எஸ். எதிரி அல்ல என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
கலப்பு திருமணத்துக்கு ஆர்.எஸ்.எஸ். எதிரி அல்ல - மோகன் பகவத்
Published on

புதுடெல்லி,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் கருத்தரங்கு டெல்லியில் நடந்தது. இதன் நிறைவு நாளான இன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திடம், கலப்பு திருமணம், கல்வி, சாதிய அமைப்பு முறை ஆகியவற்றில் அந்த அமைப்பின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், கலப்பு திருமணத்துக்கு ஆர்.எஸ்.எஸ். எதிரி அல்ல. அது ஆண், பெண் இணக்கம் சார்ந்த பிரச்சினை. கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தினால் அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் இடம் பிடித்து இருப்பார்கள். தற்போதைய இந்திய கல்வி முறை மிகவும் பின்தங்கியதாக உள்ளது. எனவே நமக்கு புதிய கல்விக் கொள்கை தேவை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com