

புதுடெல்லி,
ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் 2019-ல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த எஸ் 400 ஏவுகணைகள், தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளைக்கூட மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இதனால் முதல் கட்டமாக 800 -மில்லியன் டாலரை இந்தியா ரஷ்யாவிடம் 2019-லேயே கொடுத்துவிட்டது. ஆனால் இன்னும் ஏவுகணைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்த நிலையில், திட்டமிட்டபடி இந்தியாவுக்கு எஸ் 400- ஏவுகணை அமைப்புகளை விநியோகிக்கும் பணி தொடங்கியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.