பிரதமர் மோடியுடன் ரஷிய துணை பிரதமர் சந்திப்பு

2 நாட்கள் பயணமாக ரஷிய துணை பிரதமர் இந்தியா வந்துள்ளார்.
பிரதமர் மோடியுடன் ரஷிய துணை பிரதமர் சந்திப்பு
Published on

டெல்லி,

ரஷிய துணை பிரதமர் டெனிஸ் மந்த்ரொவ். இவர் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், டெனிஸ் மந்த்ரொவ் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி துறை, சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இதேபோல், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடனும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனும், டெனிஸ் மந்த்ரொவ் ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com