

குமுளி,
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஐப்பசி மாத சித்திரை நட்சத்திரத்தில் ஒரு நாள் சிறப்பு வழிபாடு நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வழிபாடு இன்று நடைபெற்றது. இதனையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது.
சிறப்பு வழிபாடுகள் எதுவும் இன்றி, தரிசனத்துக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பின்னர், இரவு நடை அடைக்கப்படும்.தொடர்ந்து, நாளை அதிகாலை 5.30 மணிக்கு மகாக ணபதி ஹோமத்துடன் வழிபாடுகள் தொடங்கும்.
காவடியார் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்பட்ட நெய்யை எடுத்து அபிஷேகம் செய்யப்படும். மதியம் பூஜை,தீபாராதனை, படிபூஜை நடைபெற்று, இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் எனும் பாடலுடன் கோவில் நடைசாத்தப்படும்.
இதன்பின்னர், நவம்பர் 16 ஆம் தேதி மாலை மண்டல கால தொடர் வழிபாட்டுக் காக, கோயில்நடைமீண்டும் திறக்கப்படும்.